முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 10:02 am IST
பகிர்:

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி தொகுதிக்கு உள்பட்ட வந்தவாசி, மருதாடு, தெள்ளாறு, தேசூர் ஆகிய கிராமங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்துக்கு அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், அமைப்புச் செயலருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். கட்சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார். மேலும், கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை அவர் வழங்கினார்.
அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, முன்னாள் மாவட்டச் செயலர் சி.சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவர் பி.முனிரத்தினம், ஒன்றியச் செயலர்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், வி.தங்கராஜ், டி.வி.பச்சையப்பன், அர்ஜுனன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா, நகரச் செயலர்கள் பாஷா, முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments