முகப்பு
திருவண்ணாமலை

கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 9:28 am IST
பகிர்:

வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 வந்தவாசி புதிய பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடம், அரசு மருத்துவமனை வளாகம், நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சனிக்கிழமை அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 அப்போது, 11 பைக்குகள், 4 மொபெட்டுகள் கடந்த சில நாள்களாக கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது.
 இதையடுத்து, 15 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments