போளூர் காவல் நிலையத்தில் வரவேற்பாளர் நியமனம்
போளூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வரவேற்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.
போளூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வரவேற்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜின் உத்தரவுப்படி, போளூர் காவல் நிலையத்தில் புதிதாக வரவேற்பாளர் நியமிக்கப்பட்டார். போளூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு வரவேற்பாளர் உதவுவார். மேலும், புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களின் வருகை குறித்து வருகைப் பதிவேட்டில் பதிந்து கொள்வார்.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர் புகார் அளிக்க பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் தயாளன் டனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.