முகப்பு
திருவண்ணாமலை

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:41 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக, நகர 
அதிமுக, தெற்கு மாவட்ட அமமுக ஆகியவை சார்பில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. 
வேட்டவலம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரணி: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த சேவூர் நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெண்கலச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 100 அடி உயர கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஏற்றினார்.
பின்னர், அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் தங்களது பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கிக் கொண்டாட வேண்டும் என்றார்.
நிகழ்வில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் செஞ்சி  வெ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், அரசு வழக்குரைஞர் க.சங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்யாறு:  செய்யாறில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், பேருந்து நிலையம், ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு எம்.எல்.ஏ தூசி கே.மோகன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ 
கே.குணசீலன், அதிமுக நிர்வாகிகள் எம்.மகேந்திரன், அ.ஜனார்த்தனம், அ.அருணகிரி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.
செங்கம்: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, செங்கம் - போளூர் சாலையில் அமைந்துள்ள காக்கங்கரை விநாயகர் கோயிலில் செங்கம் மகரிஷி 
கல்விக் குழுமத் தலைவர் மனோகரன் தலைமையில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் ராமஜெயம் வரவேற்றார். முன்னாள் ஒன்றியக் குழு அதிமுக தலைவர் கணேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, செங்கம் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், போளூர் சாலை, மில்லத் நகர் கூட்டுச் சாலை, தளவாநாய்கன் பேட்டை ஆகிய பகுதியில் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
போளூர்: போளூரை அடுத்த கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட தென்மாதிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா சிலைக்கு எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.
மாவட்ட அதிமுக துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர் துரை, வழக்குரைஞர் எழில்மாறன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கலசப்பாக்கம், பூண்டி, எலத்தூர்மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். பூண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பத்மாவதி ஜீவானந்தம், ஒன்றியக் குழு முன்னாள்துணைத் தலைவர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.