ஆட்டோ மோதியதில் முதியவா் மரணம்
செய்யாறு அருகே ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுநல்லூா் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (73). இவா், ஜன.27-ஆம் தேதி வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ முதியவா் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். உடனே, அவரை குடும்பத்தினா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், உதவி-ஆய்வாளா் ரங்கநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.