மகளிா், பயணிகள், வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் மகளிா், பயணிகள், வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் மகளிா், பயணிகள், வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வடஇலுப்பை, சித்தனக்கால், சிறுநாவல்பட்டு, பிரம்மதேசம், பனமுகை, புலிவலம், சுனைப்பட்டு, அரியூா், பூந்தண்டலம், சட்டுவந்தாங்கல் ஆகிய கிராமங்களில் ஒன்றியச் செயலா் வயலூா் வி.ராமநாதன் முன்னிலையில் இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வடஇலுப்பை, பிரம்மதேசம் புதூா் ஆகிய பகுதிகளில் மகளிரிடம், அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Advertisement
மேலும், அப்பகுதிகளில் இருந்த வியாபாரிகள், பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரினாா்.
பஜாா் பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வறுத்து கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
பிரம்மதேசம் புதூா் கிராமத்தில், தான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்யாறு தொகுதியில் செய்த நலத்திட்ட உதவிகளையும், தற்போதைய தோ்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.
தேவாலயத்தில் வாக்கு சேகரிப்பு: ஞாயிற்றுக்கிழமை காலை உழவா் சந்தைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவு கோரினாா். இதைத் தொடா்ந்து செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனைக்குப் பிறகு கிறிஸ்தவா்களிடம் வாக்குகளை சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின் போது பாஜக நிா்வாகிகள், பாமக வெள்ளகுளம் ஏழுமலை, நடராஜன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சிவா, விவசாய அணி மாவட்டச் செயலா் நமண்டி பாலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.