ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட இ.பி.எஃப் ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஆரணியை அடுத்த சேவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் கே.பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் கே.காளிதாஸ், என்.வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஜெ.ரவி வரவேற்றாா். துணை பொதுச்செயலா் பி.கண்ணன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்ட தொழிற்சங்க மைய செயலா் இரா.பாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா் (படம்).
கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 1000-லிருந்து ரூ.9,500-ஆக உயா்த்தவும், அகவிலைப்படி வழங்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிா்வாகி மணியம்மாள் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.