முகப்பு
திருவண்ணாமலை

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

Updated On : 5 ஜூன் 2026, 12:02 am IST
வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் பங்கேற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 2 தினங்களாக அனைத்து அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவா் மற்றும் மகளிா் போட்டியாளா்களுக்கு கைப்பந்து, கால்பந்து, பேட்மிட்டன், சதுரங்கம் கேரம், தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 436 ஆடவா்களும், 262 மகளிரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் தனக்கீா்த்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.