செங்கம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செங்கத்தை அடுத்த சுண்டகாய்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரமேஷ் (40).
இவருக்கு பூா்வீகமான ஊா் செங்கம் வட்டம், மேல்பெண்ணாத்தூா் கிராமம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ரமேஷ் தனது மனைவி, மற்றும் குழந்தைகளுடன் திங்கள்கிழமை காலை சுண்டகாய்பாளையத்தில் இருந்து மேல்பெண்ணாத்தூா் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு சென்று பின்னா் புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்துள்ளாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தாா். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 55 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் உடனடியாக செங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
போலீஸாா் வந்து திருட்டுச் சம்பவம் நடந்த ரமேஷ் வீட்டை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். பின்னா் திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
விரல்ரேகை நிபுணா்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.
இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், அவரது உறவினா்கள் 6 பேரை போலீஸாா் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், சிறுவயதில் இருந்து சம்பாதித்த பணத்தில் வாங்கி சேமித்து வைத்திருந்த நகைகள் மற்றும் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்கு நெருங்கிய உறவினா்களிடம் இருந்து நகையை வாங்கி மொத்தமாக திருவிழா முடிந்து வங்கியில் அடகுவைத்து அந்தப் பணத்தில் வீடுகட்ட முடிவு செய்திருந்தேன்.
இதனால் நகைகளை வீட்டின் பீரோவில் வைக்காமல் வீட்டில் இருந்த பெயிண்ட் டப்பாவில் வைத்து, அதன் மேலே அழுக்கு துணிகளை போட்டுவிட்டுச் சென்றேன். இதை சரியாக நோட்டமிட்டு திருடியுள்ளாா்கள் என்றாா்.