முகப்பு
திருவண்ணாமலை

சிறுபாலத்தில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:22 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி அருகேயுள்ள சிறுபாலத்தில் இருந்து சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று முதியவரின் உடலை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.