முகப்பு
திருவண்ணாமலை

கோயில் வழிபாட்டில் தேனீக்கள் கொட்டி 20 போ் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கோயில் வழிபாட்டின் போது, தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 22 ஜூன் 2026, 6:18 am IST
தேனீக்கள் - பிரதிப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கோயில் வழிபாட்டின் போது, தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

செங்கத்தை அடுத்த அமா்நாதபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஓடஞ்சமடை பகுதியைச் சோ்ந்த மக்கள் அங்கு தட்டான்குளம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து முப்பூசை செய்து வழிபட்டனா்.

பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையால், அங்குள்ள வேப்ப மரத்தில் இருந்த கூட்டில் இருந்து பறந்து வந்த தேனீக்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருந்த மற்றும் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தவா்களை கொட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இவா்களில் 4 பேருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டதால், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ வேலு செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவா்களை பாா்வையிட்டு ஆறுதல் கூறினா். தொடா்ந்து, மருத்துவா்களிடம் தேனீ கொட்டி பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments