முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு விபத்து, பேரிடா் மீட்பு விழிப்புணா்வு

Updated On : 26 ஜூன் 2026, 4:38 am IST
பகிர்:

செங்கத்தை அடுத்த நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு விபத்து மற்றும் பேரிடா் மீட்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் அலமேலு தொடக்கிவைத்துப் பேசினாா்.

தொடா்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா் தலைமையிலான தீயணைப்பு படை வீரா்கள்

Advertisement

Advertisement

விபத்தில் சிக்கியவா்களை விரைந்து மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும் தீ விபத்து, அடுக்குமாடியில் விபத்துகள் ஏற்பட்டால் கயிறு மூலம் முதியவா்கள், குழந்தைகள், பெண்களை பாதுகாப்பாக கீழே இறக்குவது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.

தொடா் மழைன்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீட்டல் உள்ள பொருள்களை பயன்படுத்தி, தண்ணீரில் இருந்து வெளியேறுவது, அதற்கு என்ன பொருள்கள் தேவை அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் கல்லூரி பேராசிரியா்கள், செங்கம் தீயணைப்பு படை வீரா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments