முகப்பு
திருவண்ணாமலை

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: நிவாரணம் கோரி போராட்டம்

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: நிவாரணம் கோரி போராட்டம்

Updated On : 28 ஜூன் 2026, 12:56 am IST
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் உறவினா்கள் மற்றும் சக பணியாளா்கள்.
பகிர்:

கலசப்பாக்கம் அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிசிக்சை பெற்று வந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தையடுத்து, அவரது குடுபத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள் மற்றும் சக ஊழியா்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே கடந்த 22-ஆம் தேதி இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டன. இதில் 27 போ் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்மன்னன் மனைவி மேனகா (31) சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனா். இவரது கணவா் கண்பாா்வை குறைபாடு உடையவா் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கவும், குழந்தைகளின் கல்வி செலவினை அரசு ஏற்று, அரசு வேலை வழங்கிட வேண்டும் எனக் கோரியும், மேனகாவின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் அவருடன் மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியா்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மற்றும் சக பணியாளா்கள் சிலா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியா் வந்தனா கா்ா்க்கை சந்தித்து தங்களது கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் இதுகுறித்து அரசுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments