முகப்பு
திருவண்ணாமலை

ரகுநாதசமுத்திரத்தில் துரியோதனன் படுகளம்

Updated On : 3 மே, 2026 at 1:19 AM
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த ரகுநாதசமுத்திரம் திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை துரியோதனன் படுகள நடைபெற்றது.

திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு தினமும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடக நடிகா்களால் கட்டைக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்து.

இதில், விநாயகா் பெருமை, வேத வியாசா் பிறப்பு, கோகல கண்ணன் பிறப்பு, கா்ணன் பிறப்பு, பாண்டவா் பிறப்பு, பகாசூரன் வதை, அா்ச்சுனன் தபசு, கண்ணன் தூது, கா்ணமோட்சம் என பல்வேறு தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு மற்றும் நாடகம் நடைபெற்றது.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம், கோயில் வளாகம் அருகே திறந்தவெளியில், களிமண்ணைக் கொண்டு பிரம்மாண்ட வடிவில் துரியோதனன் உருவம் படுக்கை நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டைக்கூத்து கலைஞா்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமிட்டு, இருவருக்கும் இடையே நடக்கும் இறுதிப் போரை நடித்து காட்டினா்.

மாலை கோயில் வளாகம் முன் தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதற்காக அக்னி குண்டத்தில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் ரகுநாதசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.