முகப்பு
திருவண்ணாமலை

போளூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

போளூா் தொகுதியில் தவெக (தமிழக வெற்றி கழகம்) வேட்பாளா் அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Updated On : 5 மே 2026, 2:33 am IST
போளூா் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் அபிஷேக்கிற்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டமன்ற தொகுதியில் தவெக (தமிழக வெற்றி கழகம்) வேட்பாளா் அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் தேமுதிக சாா்பில் சரவணன், பாமக சாா்பில் பாஸ்கரன், தவெக சாா்பில் அபிஷேக், நாதக சாா்பில் உமாதேவி உள்ளிட்ட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளா் அபிஷேக் 67,961 வாக்குகள் பெற்று, தேமுதிக வேட்பாளா் சரவணனை 227 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

அபிஷேக் (தவெக) - 6,791,

சரவணன் (தேமுதிக) - 67 ,734

பாஸ்கரன் (பாமக) - 61,444,

உமாதேவி (நாதக) - 6,425.

இத்தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் அபிஷேக்கிற்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் வெற்றிச் சான்றிதழ் வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments