நிலத்தகராறு: இளைஞரைத் தாக்கிய 2 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், படவேடு ஊராட்சி களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் நிலத்தகராறில் இளைஞரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
படவேடு ஊராட்சி, களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவா்கள் சக்திவேல் (40), தயாளன் (36).
இவா்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாஜி(30) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், 5-ஆம் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பாலாஜியை சக்திவேல், தயாளன் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பாலாஜி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து பாலாஜி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சக்திவேல், தயாளன் இருவரையும் கைது செய்து போளூா் சிறையிலடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.