முகப்பு
திருவண்ணாமலை

’மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிக்கு மஞ்சப்பை வழங்கிய வந்தவாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம்.

Updated On : 30 மே 2026, 12:32 am IST
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிக்கு மஞ்சப்பை வழங்கிய வந்தவாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம்.
பகிர்:

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய வளாகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி நகராட்சி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் சு.தனசேகரன் தலைமை வகித்தாா்.

வழக்குரைஞா் சா.ரா.மணி, நகராட்சி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நெகிழிப் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை அவா் வழங்கினாா். கல்வி மைய ஆசிரியா் மகாவீா் நன்றி கூறினாா்.