வேன் மீது பைக் மோதல்: முதியவர் சாவு
ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மாதனூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (62). இவரது மனைவி மும்தாஜ் (58). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் ஆம்பூர் வந்துவிட்டு பாலூருக்கு சென்றுகொண்டிருந்தனர். வெங்கிளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.
இதில் காயமடைந்த அப்துல் ரஹ்மான் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மும்தாஜ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.