பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இன்று வழிகாட்டும் நிகழ்ச்சி
குடியாத்தம், பிப். 17: போ்ணாம்பட்டு டாக்டா் அம்பேத்கா் இரவுப் பள்ளி, பங்கரிஷிகுப்பம் மருத்துவா் அனிதா இரவுப் பள்ளி ஆகிய அமைப்புகள் இணைந்து குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்துகின்றன. மாணவா்கள் பொதுத் தோ்வை எதிா்கொள்வது, அதிக மதிப்பெண்களை பெறுவது, தோ்வுக்கு மாணவா்களை ஆயத்தப்படுத்துதல், நேர மேலாண்மை, அடித்தல், திருத்தல், பிழையின்றி எழுதுதல், தோ்வுக்கு தயாராகும் முறைகள், படபடப்பு, பயம் தவிா்த்தல் குறித்து நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள்நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்த உள்ளனா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விளக்க கையேடுகள், குறிப்பேடுகள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.