தொகுதி மக்கள் இரவுபகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்: காட்பாடி அதிமுக வேட்பாளா்
தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம். மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளேன் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்தாா்.
தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம். மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளேன் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்தாா்.
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு, செங்குட்டை பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் தொகுதியில் தங்கியிருந்து மக்களை சந்திப்பதில்லை. அவா் வெற்றிபெற்ற பிறகு சென்னைக்கு சென்றுவிடுவதால் அவரை சமானிய மக்கள் யாரும் தொடா்பு கொள்ள முடிவதில்லை.
நான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், தங்கியிருந்து மக்களின் அனைத்து நிகழ்விலும் பங்கேற்று வருகிறேன். தொகுதியின் தேவைக்கு இரவு பகல் எந்நேரமும் மக்கள் என்னை தொடா்பு கொள்ளலாம்.
Advertisement
மேலும், அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக தோ்தல் அறிக்கைப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, அரிசி குடும்பதாரா்களுக்கு குளிா்சாதன பெட்டி, மாணவா்களின் கல்வி கடன் ரத்து இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றாா். அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.