இன்று மகளிர் விளையாட்டுத் தேர்வு போட்டி
கிருஷ்ணகிரியில் இன்று, தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரியில் இன்று, தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017 - 18-ஆம் ஆண்டுக்கான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள், 2017-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதியன்று 25 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இதில் பிரிவு 1-இல் கூடைப்பந்து, பளுதூக்குதல், நீச்சல் ஆகிய போட்டிகளும், பிரிவு 2-இல் மல்யுத்தம், வளைகோல்பந்து, குத்துச்சண்டை, பிரிவு 3-இல் தடகளம், இறகுப் பந்து, மேசைப் பந்து, பிரிவு 4-இல் கோ-கோ, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்வுப் போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநில அளவிலான தேர்வுப் போட்டிக்கு தகுதி பெறுவர். எனவே, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.