குப்பச்சிப்பாறையில் 4 மணி நேரம் மின்நிறுத்தம்
குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என
குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குப்பச்சிப்பாறை பீடரில் கம்பி மாற்றும் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் குப்பச்சிப்பாறை, குருபரப்பள்ளி, கங்கசந்திரம், பீமாண்டப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கக்கன்புரம், மணியாண்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.