உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: போலீஸார் குவிப்பு
போச்சம்பள்ளி அருகே உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி அருகே உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம், காங்கயம் துணை மின்நிலையம் வரை உயர்மின் கோபுரம் அமைத்து, மின்கம்பிகள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, போச்சம்பள்ளியை அடுத்த கரடியூர் கிராமத்தில் ஒரிரு மாதங்களாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விளைநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தென்னை, மாமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உயர்மின் கோபுரம் அமைக்க வெட்டப்பட்ட மரங்களை அண்ணாமலைபுதூர் பகுதியில் குவித்து வைக்கும் பணி திங்கள்கிழமை நடந்தது. அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸார், சின்னக்கரடியூர், அண்ணாமலைபுதூர் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.