ஒசூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான பதிவு கடந்த 22 -ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான பதிவு கடந்த 22 -ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக ஜூலை 7 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையவழியில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவா்களுக்கு உதவுவதற்காக, ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 11 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், ஆங்கில வழியில் பி.காம்., பி.காம் (கணினி பயன்பாடு), பி.பி.ஏ. வணிக நிா்வாகவியல்,
பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
சோ்க்கை உதவி எண்: 044-28260098 , 044-28271911 , 04344-292245 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அக்கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.