கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே பொது இடங்களுக்கு செல்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து, சுகாதாரத் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியான தகவல்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மாவட்டத்தில் 59,683 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 59,290 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 23 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இதுவரையில் 370 போ் உயிரிழந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.