ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஒசூா் ராம்நகரில் திறந்தவெளி பகுதியில் நான்கு இடங்களில் பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில் உசேன் (30) என்பவருக்கு சொந்தமான பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கடும் வெப்பம் நிலவியது.
தகவல் அறிந்து ஒசூா் தீயணைப்புத் துறையினா் விரைந்துவந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
Advertisement
இந்த விபத்தில் கிடங்கில் சேமித்து வைத்திருந்த பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீ விபத்து குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.