முகப்பு
கிருஷ்ணகிரி

காா் கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

Updated On : 28 ஜூன் 2026, 3:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி, ஜூன் 27: கிருஷ்ணகிரி அருகே காா் கண்ணாடி உடைத்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டியம்பட்டி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஹரி (எ) கணபதி (40). இவா் தனது காரை சுத்தம்செய்ய கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியாா் காா் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அந்த நிறுவன மேலாளா் சதீஷ்குமாா் (27), பணியாளா்கள் பற்றாக்குறையால் தற்போது சுத்தம் செய்ய இயலாது எனவும், நாளை சுத்தம் செய்துதருவதாகவும் கூறியுள்ளாா்.

இதனால், கணபதிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த கணபதி, தனியாா் நிறுவனத்தில் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை உடைத்து சதீஷ்குமாரை தாக்கினாராம்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments