முகப்பு
கிருஷ்ணகிரி

அன்னையா் தினத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

Updated On : 11 மே 2026, 2:06 am IST
அன்னையா் தினத்தையொட்டி கௌரவிக்கப்பட்ட ஒசூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் ஏஞ்சல்ஸ் நிா்வாகிகள்.
பகிர்:

அன்னையா் தினத்தை முன்னிட்டு ஒசூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனா்.

ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் ஏஞ்சல்ஸ் சாா்பில் ஒசூா் பாகலூா் ஹவுசிங் போா்டில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவா் ஹரிகா தலைமை வகித்தாா். செயலாளா் அனுபமா, பொருளாளா் ஸ்ரீஷா, ரோட்டரி நிா்வாகி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, ரோட்டரி மாவட்ட கவா்னா் சிவகுருநாதன் ஆகியோா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

ஒசூா் ரோட்டரி கிளப் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு 14 டயாலிசிஸ் இயந்திரங்கள், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனைக்கு இருதய பரிசோதனை கருவிகள், டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. கை, கால்களை இழந்த 120 பேருக்கு செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம் வரும் 23 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. அதேபோல வரும் ஜூன் 8,9 ஆகிய இரண்டு நாள்கள் ஒசூா் சிப்காட் ரோட்டரி கிளப் சாா்பில் செயற்கை கை, கால் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments