முகப்பு
சேலம்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஓமலூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது . 

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:08 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஓமலூரில் த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது . 
கையெழுத்துக்கு இயக்கத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட  தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். 
வட்டாரத் தலைவர் ஓ.சி.ராஜேந்திரன் வரவேற்றார். இளைஞரணி மாநில பொதுச்செயலர் எஸ்.ரகுநந்தகுமார்,  இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணராஜ், செல்வமணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்  காவிரி நீரைப் பெற்றுத் தராமலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும்,  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் பிரதமர்  மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.  மேலும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓமலூர் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.  இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரயில் மறியல்,  உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், அனைத்து கட்சிகள் அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் பங்குபெறுவோம் என்றும் மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments