முகப்பு
சேலம்

பள்ளி மாணவி மாயம்: போலீஸார் விசாரணை

வாழப்பாடி அருகே, பள்ளிக்குச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:08 am IST
பகிர்:

வாழப்பாடி அருகே, பள்ளிக்குச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் சுந்தரராஜன். இவரது 15 வயது மகள், வாழப்பாடியிலுள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லையாம். 
உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் மகேஸ்வரி, வாழப்பாடி  போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில்  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments