ஈச்சம்பட்டி தனியார் பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டம்
ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம்
ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி மதுரம் குழந்தைகள் காப்பக இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், பரிசுகள் வழங்கினர்.
மேலும் குழந்தைகளுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அக்குழந்தைகளுடன் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் டி.மாசிலாமணி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கனகராஜன், துணைத் தலைவர் சுசிலா ராஜமாணிக்கம்,பொருளாளர் குமரேசன், இயக்குநர்கள் மதியழகன், மணி, ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.