ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்: பேரூராட்சி அறிவிப்பு
காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று
காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், பொது இடங்களிலும் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா விஜயகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பேரூராட்சிப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.