முகப்பு
சேலம்

சேலம் புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு

சேலம் புத்தகத்  திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

Updated On : 5 நவம்பர் 2018, 8:42 am IST
பகிர்:

சேலம் புத்தகத்  திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள போஸ் மைதானத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம்,  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் சார்பில் முதல்முறையாக நடத்தும் புத்தகத் திருவிழா வரும் நவ. 9 ஆம் தேதி  முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெற உள்ளன. 
இக்கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புத்தகங்கள்  இடம் பெறுகின்றன. அதுமட்டுமன்றி நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள்,  அறிஞர்கள், வல்லுநர்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. சேலம் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் பெற்றுக் கொண்டார். 
தொடர்ந்து சேலம் புத்தக வாசிப்போர் இயக்கத்தின் இலச்சினையை ஆட்சியர் வெளியிட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயானந்த் பெற்றுக் கொண்டார்.  இதையடுத்து புத்தகத் திருவிழா துண்டுப் பிரசுரத்தை ஆட்சியர் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments