தீபாவளி ஜவுளி, பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்!
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகை செவ்வாய்க்கிழமை (நவ. 6) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிக்கடைகள், பட்டாசுக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் டவுன் சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி
வழிகிறது.
அதேபோல நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகளிலும் புத்தாடை வாங்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். மாநகரப் பகுதியில் பட்டாசுக் கடை, இனிப்புக் கடைகள் மற்றும் பலகாரக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு மாநகர போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.