மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆகஸ்ட் 15) காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 85,000 கனஅடியிலிருந்து 65,000 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைத் தணிந்ததால் 4-வது நாளாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 85,000 கன அடியாக உள்ளது.
Advertisement
Advertisement
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 42,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.