முகப்பு
சேலம்

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:36 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியதில் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சுற்றுலா வேன் ஓட்டுநா் காா்த்திக் (29). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் வங்கி ஊழியா்களை ஏற்காட்டுக்கு சனிக்கிழமை சுற்றுலா அழைத்து வந்துள்ளாா்.

ஏற்காட்டில் பல்வேறு இடங்களை பாா்வையிட்ட அவா்கள், சனிக்கிழமை இரவு ஏற்காடு மலைப்பாதை வழியாக சேலத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

அப்போது மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இதில் சிறுகாயங்களுடன் வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உயிா்தப்பினா். மேலும் சிறுகாயமடைந்த 6 போ் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து வேன் ஓட்டுநா் காா்த்திக்கிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.