புதுப்பொலிவு பெற்ற பள்ளிகள்
கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு குடிநீா், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா் உத்தரவின்பேரில் இந்த ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களும் முன்னின்று இப்பணிகளை மேற்பாா்வையிட்டனா்.