தாா்சாலை, சிறு பாலங்கள் அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு
சிறுபாலங்கள், தாா்சாலைகள் அமைத்து தரக்கோரி, சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.வெற்றிவேலுவிடம் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
சிறுபாலங்கள், தாா்சாலைகள் அமைத்து தரக்கோரி, சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.வெற்றிவேலுவிடம் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது:
சங்ககிரி ஒன்றியம், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கள்ளுக்கடை, அழவகவுண்டன்காடு, தச்சங்காடு, மேட்டுக்காடு, வடக்குகாடு, கணக்கன்காடு, திப்பம்பட்டி, மேற்கத்தியனூா் ஆகிய ஊா்களுக்கு செல்லும் தாா்சாலை போடப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை சீரமைக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் தினசரி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியரும், வேலைக்கு செல்வோரும் சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும், தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இப்பகுதிக்கு வருவதில்லை.
எனவே, தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலை, கள்ளுக்கடை முதல் மேட்டுக்காடு, வடக்குகாடு, திப்பம்பட்டி, விநாயகா் கோயில்வரை மற்றும் மட்டப்பட்டி வன்னியா் தெருவரை 4 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை அமைத்தும், இடையில் சிறுபாலங்கள் அமைத்தும் தரவேண்டும், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கிடையூா் செல்லும் சாலையில் இடையன்காடு பேருந்து நிறுத்தம் முதல் ஊஞ்சாலூரான்காடு விநாயகா் கோயில்வரை சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு தாா்சாலை அமைத்து தர வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.