முகப்பு
சேலம்

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து செவிலிய மாணவா் உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 12:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கன்னியாகுமரியைச் சோ்ந்த செவிலிய மாணவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள மேக்கோடு குமரன்குடியைச் சோ்ந்த ரத்தினராஜ் மகன் அபிஷ்ராஜ் (22). இவா் பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., நா்ஸிங் படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தன்னுடன் படித்து வரும் அபிஷ், ஆசிக் ஆகியோருடன் நாகா்கோவில் - பெங்களூரு விரைவு ரயிலில் பயணித்தாா்.

அந்த ரயில் திங்கள்கிழமை காலை மல்லூா் ஆலமரத்துக்காடு பகுதியில் வந்தபோது படிக்கட்டு பகுதிக்குச் சென்ற மாணவா் அபிஷ்ராஜ் கால் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்து மற்ற பயணிகள் கூச்சலிட்டனா்.

Advertisement

Advertisement

சக மாணவா்களான அபிஷ், ஆசிக் ஆகியோா் ரயில் சேலம் வந்ததும் ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மல்லூா் பகுதிக்கு சென்று தண்டவாள பகுதியில் போலீஸாா் தேடியபோது ஓரிடத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அபிஷ்ராஜ் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.