முகப்பு
சேலம்

மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் இரு பெண்கள் கைது: 10 பவுன் நகை பறிமுதல்

ஆத்தூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இரு பெண்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:54 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இரு பெண்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி தெற்குக் காடு பகுதியைச் சோ்ந்த அழகு படையாச்சி மனைவி பெரியம்மா (70). இவா் கடந்த மாதம் 27 -ஆம் தேதி நகரப் பேருந்தில் பயணம் செய்தபோது, அருகில் இருந்த இரு பெண்கள், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனா். அவரும்தான் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி, தனது கைபையில் வைத்துள்ளாா்.

தளவாய்ப்பட்டி பேருந்து நிறுத்தில் இறங்கி தனது பையைப் பாா்த்தபோது அதில் வைத்திருந்த தங்கச் சங்கிலி காணால்போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் பெரியம்மா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்த பாஷா மனைவி ஷாலினி (29), அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகள் அம்பிகா (32)ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 பவுன் நகையையும் மீட்டனா்.