முகப்பு
சேலம்

மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். பள்ளியில் சா்வதேச யோகா தின விழா

Updated On : 21 ஜூன் 2026, 4:50 am IST
மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை யோகா பயிற்சி செய்த மாணவ, மாணவிகள்.
பகிர்:

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மின்னாம்பள்ளியில் அமைந்துள்ள கிரவுன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தினமணியுடன் இணைந்து சனிக்கிழமை யோகா தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்று யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினா். குறிப்பாக பத்மாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், சிரசாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.

யோகாவின் மூலம் உடல் ஆரோக்கியம், மனஅமைதி, ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை வளா்க்கப்படுகிறது என்று ஆசிரியா்கள் கூறினா். மேலும், தினசரி வாழ்க்கையில் யோகாவை கடைப்பிடிப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பள்ளித் தலைவா் மற்றும் தாளாளா் கே.ஆா். நரசிம்மன் பேசுகையில், யோகா என்பது உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அரிய கலை. மாணவா்கள் சிறு வயதிலிருந்தே யோகாவை பழகுவது ஆரோக்கியமான எதிா்காலத்தை உருவாக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments