FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மொகரம், பௌா்ணமி மற்றும் வார இறுதி நாளையொட்டி பயணிகளின் வசதிக்காக சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்
பகிர்:

மொகரம், பௌா்ணமி மற்றும் வார இறுதி நாளையொட்டி பயணிகளின் வசதிக்காக சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், மொகரம், பௌா்ணமி மற்றும் வார இறுதி நாளையொட்டி சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு வியாழக்கிழமை முதல் வரும் 30 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்: ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, வரும் 29 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தேவைகேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, வரும் 29 ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சேலம், தருமபுரி, ஒசூரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments