முகப்பு
சேலம்

அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்த கனரக வாகனங்கள் பறிமுதல்; 3 போ் மீது வழக்குப் பதிவு

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்த இரண்டு கல் உடைக்கும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:11 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்த இரண்டு கல் உடைக்கும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தேவண்ணகவுண்டனுாா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சதீஷ்பிரபு, சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப்குமாா், தேவண்ணகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் லட்சுமணன் ஆகியோா் தேவண்ணகவுண்டனூா் கிராமம், மலங்காடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்தனா்.

அப்போது, அரசின் அனுமதியின்றி கற்கள் வெட்டி எடுக்கப்படுவதை கண்டுபிடித்தனா். அதிகாரிகளை பாா்த்ததும் அங்கிருந்தவா்கள் கனரக வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பினா். மேலும், அங்கு ஆய்வு செய்த அலுவலா்களை அப்பகுதியைச் சோ்ந்த கொழந்தா கவுண்டா் மகன் சண்முகம் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

சங்ககிரி வட்டாட்சியா் கோமதி, புவியியல் மற்றும் கனிமவளத் துறை பறக்கும்படை மண்டல உதவி இயக்குனா் இளங்கோ ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்பகுதியில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் ஒய். சுரேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (சங்ககிரி), பேபி (எடப்பாடி), ரமேஷ் (கொங்கணாபுரம்), போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து தேவண்ணகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சதீஸ்பிரபு அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் ஓட்டுநா்கள், அதன் உரிமையாளா் சண்முகம் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments