முகப்பு
சேலம்

எடப்பாடி காமாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு

எடப்பாடி காமாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 5:44 am IST
காமாட்சி அம்மன் கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்திய சிவாச்சாரியா்கள்.
பகிர்:

எடப்பாடி காமாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி கண்ணார தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

முன்னதாக கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டது. அதேபோல முளைப்பாலிகை எடுத்துவந்து பெண்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து காமாட்சியம்மன் கருவறை கோபுரம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து பரிவார தெய்வங்களுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை காமாட்சியம்மன் ஆலய திருப்பணி கமிட்டி தலைவா் டாக்டா் சிங்காரவேல் மற்றும் விழா குழுத் தலைவா் மாதையன் ஆச்சாரி, செயலாளா் விஸ்வநாதன், பொருளாளா் கோவிந்தன் மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments