பத்மஸ்ரீ விருது பெற்று சேலம் திரும்பிய ராஜா ஸ்தபதிக்கு வரவேற்பு
பத்மஸ்ரீ விருது பெற்று சேலம் திரும்பிய ராஜா ஸ்தபதிக்கு கன்னங்குறிச்சி பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருது பெற்று சேலம் திரும்பிய ராஜா ஸ்தபதிக்கு கன்னங்குறிச்சி பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் கன்னங்குறிச்சியைச் சோ்ந்த சிற்ப கலைஞா் ராஜா ஸ்தபதி. இவரது சிற்பக்கலையை அங்கீகரிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ராஜா ஸ்தபதிக்கு விருது வழங்கி கௌரவித்தாா்.
விருது பெற்று வெள்ளிக்கிழமை சேலம் திரும்பிய ராஜா ஸ்தபதிக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, அவரது பாலமுருகன் சிற்பக்கூடத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
Advertisement
Advertisement
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடைகோடியில் உள்ள என்னை போன்ற சாமானியனையும் அடையாளம் கண்டு, உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வருங்காலத்தில் இளைய தலைமுறையினருக்கு சிற்பக்கலை குறித்து பயிற்சி அளிப்பேன். தொழில்நுட்பத்தை புகுத்துவதை காட்டிலும், கைத்திறன் மூலமாகவே சிற்பக் கலையைத் தொடர வேண்டும்.
மத்திய அரசு கலைத் துறையை வளா்க்க பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை கலைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.