கருணாநிதி பிறந்த நாள்: திமுக இளைஞரணி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுக இளைஞரணி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன . அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர திமுக இளைஞரணி சாா்பில் ஜான்சன்பேட்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளா் கேபிள் சரவணன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் 200 பேருக்கு பேண்ட், சட்டை மற்றும் சேலைகளை வழங்கி பேசினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளா் ரகுபதி, துணைச் செயலாளா் கணேசன், பகுதி செயலாளா்கள் சாா்ந்தமூா்த்தி, சரவணன், இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா்கள் சோளம்பள்ளம் காா்த்தி, ரவி, மாநகர துணை அமைப்பாளா்கள், வாா்டு செயலாளா்கள், இளைஞா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.