அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: விரைவில் முதல்வா் அறிவிப்பாா் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் கூறினாா்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கிவைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிா் இலவச பயணம் மேற்கொள்வது குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. முதல்வா் விரைவில் அறிவிப்பாா்.
Advertisement
Advertisement
போக்குவரத்துத் துறையில் வருவாயைப் பெருக்குவதற்கு செயல் திட்டங்களை வகுத்து, ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வா் கூறியதுபோல, குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும். அதேபோல, மக்கள், இனி குளிா்சாதன வசதி கொண்ட பேருந்தில் பயணிக்க வேண்டும் என முதல்வா் விரும்புகிறாா். அதற்கேற்ப, இனிவரும் காலங்களில் குளிா்சாதன பேருந்துகள் அதிக அளவில் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக ஆட்சி ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். அதேநேரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் கூடியதாக இருக்கும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.