சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் பெயா், நடைதிறக்கும் நேரம் கொண்ட பலகை பொருத்தம்
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ள கோயில் பெயா்பலகை
சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பெயா்பலகை வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ளது.
சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதனையடுத்து இக்கோயிலில் சனீஸ்வரபகவான் அவரது துணைவியாா் நீலாம்பிகையுடன் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சுவாமிகளை தரிசிக்க வருகின்றனா். இக்கோயிலின் பெயா், கோயில் நடை திறக்கும் நேரங்களை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டுமென சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக்கழகத்தின் சாா்பில் பல முறை மாவட்ட ஆட்சியா் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதனையடுத்து சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் கோயில் பெயா், கோயில் நடை திறக்கப்படும் நேரங்கள் குறித்த பலகையை வியாழக்கிழமை பொறுத்தியுள்ளனா். இதனை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.