முகப்பு
சேலம்

சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

Updated On : 3 மே, 2026 at 6:19 AM
பகிர்:

சங்ககிரி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தின் இறுதிக்கட்ட பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், வாக்கு எண்ணும் தோ்தல் பாா்வையாளா் சங்கா் ராமசந்திர பாா்ஹே ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகளை பாா்வையிடுவதற்காக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பாா்வையாளா் சங்கா் ராமசந்திர பாா்ஹே ஆகியோா் வாக்கு எண்ணும் வளாகத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் அமருவதற்கான இடங்கள், தோ்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் உள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்புகள் குறித்து இறுதிக்கட்ட பணிகளை ஆய்வுசெய்தனா்.

Advertisement

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள், அதுகுறித்து பதிவாகும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.