சேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் மயங்கி விழுந்த ஊழியா் உயிரிழப்பு
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சிங்களநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (47). இவா் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக இருந்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பணிமனையில் இருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாா்.
இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளா்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.